Translate

Amazon wellness

Tuesday, November 30, 2021

இந்தியப் பெண்ணின் சாதனை

பெண்ணே நீ ஹாக்கியை தூக்கிய தாக்கம்,

அளித்ததே ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கம்,

அறை இறுதியில் முழு மூச்சு,

அதுவே உன் மன உறுதிக்கு பெரும் சாட்சி,

பதக்கம் இல்லை.. ஆனால் வருத்தமும் இல்லை,

உன் விடா முயற்சிக்கு எல்லையும் இல்லை.

வீழ்ச்சியில் வீரம் கக்கினாய்,

நீர்வீழ்ச்சி போல் உன்னை இயக்கினாய் !

என்றும் உன் வீரம் வெல்லும்,

பொறுத்திரு.. உன் இலக்கு உன்னை தூக்கி செல்லும் !

- பிராங்கிளின் 


Sunday, November 28, 2021

சிந்துவின் சாதனை

சிந்துவே ஒரு தங்கம் என்று ஏற்போம்,

அவள் வென்ற வெங்கலத்தை காப்போம்,

அவள் ஒரு இந்திய சாதனை,

அவள் வெற்றி நமக்கெல்லாம் ஒரு போதனை,

நம் சிந்தனையை மாற்றினாள் சிந்து,

உலகமே பார்க்குதே அவளை வியந்து !

- பிராங்கிளின் 

எங்கள் அன்பு கலாமே...

எங்கள் அன்பு கலாமே...

நீ மனதில் வாழ்ந்த காலமே,

உறவுக்கு உயிர் கொடுத்தாய்,

உயிருக்கு உணர்வு கொடுத்தாய்,

எங்கள் ஜனத்துக்கு அதிபதி,

இந்திய கனவுக்கு விடிவெள்ளி,

விண்வெளியை திறந்தாய்.. மகிழ்ந்தோம்,

ஆனால் ராக்கெட் வேகத்தில் ஏன் மறைந்தாய் ?

நீ பாரதத்திற்கு ஒரு எழுச்சி...

அதுவே எங்களுக்கு என்றும் மகிழ்ச்சி..

நீ ஒரு இந்திய கனவு,

அது இன்று எங்கள் வாழ் நாளில் ஓர் அரிய நினைவு !

- பிராங்கிளின் 

நண்பர்களுக்கு சமர்ப்பணம்

உயரிய நட்பு நண்பனே,

அதற்கு உரிய பெருமை தந்தவனே,

உள்ளத்தில் அன்பு குறையாது,

என்றென்றும் நிறைவாய் நிற்பவனே,

நம் மனசு, அது அல்ல புதுசு,

ஆனால் இப்பொ ஓரு தினுசு..

ஓய்வு பெற்றபின் கேட்குது சொகுசு !

விடைபெற்றோம் அன்று, பெருமையுடன்,

காத்திருந்தோம் பொறுமையுடன்,

காலம் நீண்டது,.. வாழ்கை தொடர்ந்தது,

அடைந்தோம் இனிய நிகழ் காலத்திற்கு,

மறுபடியும் கலந்தோம்...

ஒரு வகையில் கல்லூரி ஓர் உறைவிடம் என்றால்..

வாட்சப் தந்தது தனி இடம்,

நன்றி என் அன்பு இதையங்களுக்கு.

- பிராங்கிளின் 

Ai art shop

Welcome to my art Gallery

POPULAR POSTS