Welcome to my art Gallery
Friday, April 3, 2026
Friday, February 4, 2022
மழை என்னும் இயற்கை வரம்
உறவுகள் உறங்காமல்,
கனவுகள் கலையாமல்,
நினைவுகள் கலங்காமல்,
சுமைகள் வலிக்காமல்,
மெல்லிய காற்று விரைந்து வர,
மலர் மொட்டுகள் விரிந்து பார்க்க,
ஏங்கி தவிக்கும் தேனிக்கூட்டம்,
கதிரவனை தவிழும் மேகமூட்டம்,
வெறுமையை கருமையாக்கி,
மேகம் போர்த்திய அகன்ற வானில்,
நிறைவாக கருவண்ணம் தீட்டி,
சிறு துளிகளாய் துவங்கி,
மேகத்தை இயக்கி மயக்கி,
மண்ணை கவ்வி உலுக்கி,
பிறகு சத்தமிடுமாம்,
மழை என்னும் இயற்கை வரம்.
- பிராங்கிளின்
Thursday, January 27, 2022
கிருமி நாடகம் உலகமெங்கும்
கிருமி நாடகம் உலகமெங்கும்,
அதை ஊதி பெரிசாக்கும் ஊடக வன்மம்,
ஏதும் அறியா மனித இனங்கள்,
அவனை அழிக்க துடிக்கும் பெரிய முகங்கள்,
இந்த உலக நாடகத்தால் மக்கள் பீதியாகி,
அவர்கள் பொருளாதாரம் பாதியாகி,
முக மூடிக்குள் பதுங்கும் மருத்துவம்,
உண்மையை மறைக்கும் தனித்துவம்,
போதுமடா போதுமடா,
ஊசிகள் போதுமடா,
உண்மை தெரிந்தும் அவற்றுக்கு பணிந்தோமடா,
உணவே மருந்து என்ற தமிழ் பொன் மொழியை,
மருந்தே உணவு என்று மாற்றி அமைத்து,
மருத்துவம் வெற்றி பெற்று,
மக்கள் தோல்வியுற்று,
நமக்கு நாமே என்ற முடிவுடன்,
காத்துக்கொள்வோம் துணிவுடன்.
- பிராங்கிளின்
Ai art shop
Welcome to my art Gallery