Translate

Amazon wellness

Thursday, January 27, 2022

Digital marketing

 





கிருமி நாடகம் உலகமெங்கும்

கிருமி நாடகம் உலகமெங்கும்,

அதை ஊதி பெரிசாக்கும் ஊடக வன்மம்,

ஏதும் அறியா மனித இனங்கள்,

அவனை அழிக்க துடிக்கும் பெரிய முகங்கள்,

இந்த உலக நாடகத்தால் மக்கள் பீதியாகி,

அவர்கள் பொருளாதாரம் பாதியாகி,

முக மூடிக்குள் பதுங்கும் மருத்துவம்,

உண்மையை மறைக்கும் தனித்துவம்,

போதுமடா போதுமடா,

ஊசிகள் போதுமடா,

உண்மை தெரிந்தும் அவற்றுக்கு பணிந்தோமடா,

உணவே மருந்து என்ற தமிழ் பொன் மொழியை,

மருந்தே உணவு என்று மாற்றி அமைத்து,

மருத்துவம் வெற்றி பெற்று,

மக்கள் தோல்வியுற்று,

நமக்கு நாமே என்ற முடிவுடன்,

காத்துக்கொள்வோம் துணிவுடன்.

- பிராங்கிளின் 


வெற்றிநடை போடும் தலைவனே!

வெற்றிப்படிகளில் கொட்டட்டும் மலர்கள்,

விலகிச் செல்லட்டும் வேற்றவர்களின் இடர்கள்,

உயர்ந்து நிற்பாய் அதில் என்ன சந்தேகம் ?

குனிந்து சென்றவர்களுக்கு இது கெட்ட நேரம்,

நீ இப்பொழுது காட்டும் படு வேகம்,

அழிந்து போகும் எதிரிகளின் யூகம் ! 

புது சரித்திரம் படைப்பாய் உன் சாதனையால் !

அது சாத்தியமாகும் நல்லவர்கள் சிந்தனையால்,

ஒவ்வொரு துறையிலும் உன் செயல்களின் உறுதி,

எல்லாம் பலதரப்பட்ட மக்கள் நலன் கருதி,

விரைவில் நாடே உன்னை திரும்பி பார்க்கும்,

அப்பொழுது முதல் அமைச்சரே சிறியது என்று எண்ணத் தோன்றும் !

உன் திட்டங்கள் செயல்கள் ஆகிறது !

எதிர் திட்டங்களோ தவிடு பொடியாகிறது !

குனிந்து தவழ்ந்த காலங்கள் கல்லறையானது,

நிமிர்ந்து நடக்கும் காலங்ளோ தமிழ் கருவரையில் உருவானது,

உன் நிகழ் கால  அசாத்யா சாதனைகள்,

பொற்காலத்துக்கு நடை போடும் திருப்பு முனைகள்,

தமிழ் வீட்டை காத்த நல்ல நேரம்,

நம் நாட்டை காக்க உனக்கு எந்நேரம் ?

ஏங்கி தவிக்கும் தமிழ் இனமே,

உன் தவிப்புக்கு விடிவு வந்தது இட்சணமே !

- பிராங்கிளின் 




தமிழனே உயர்ந்து நில்

குடியரசு தின அணிவகுப்பிலே,

தமிழ் நாடு இல்லை என்ற கொதிப்பிலே,

தவித்ததோமடா அந்த நினைப்பிலே,

அதிகாரமும் அகங்காரமும் கைகோர்த்தது,

தெற்கில் பலர் கை துடித்தது,

இருட்டு ஆட்சியின் கோர தாண்டவம்,

அழிய காத்திருக்கும் உன் ஆணவம்,

வடக்கு என்றும் எடக்கு முடக்கு,

தெற்கோ நாட்டிற்கு ஒளி விளக்கு,

உன் குருட்டு கண்களில் மறையும்,

எங்கள் தியாகங்கள் எப்படி தெரியும்?

அலட்சியம் செய்தால் எங்களை, அடக்குவோம் இறுதி வரை உங்களை,

பொறுத்திருந்து பார் அரசே,

தமிழன்  முழங்குவது வெற்றி முரசே !!

- பிராங்கிளின் 

மழை என்னும் இயற்கை வரம்

 உறவுகள் உறங்காமல், கனவுகள் கலையாமல், நினைவுகள் கலங்காமல், சுமைகள் வலிக்காமல், மெல்லிய காற்று விரைந்து வர, மலர் மொட்டுகள் விரிந்து பார்க்க, ...

POPULAR POSTS