குடியரசு தின அணிவகுப்பிலே,
தமிழ் நாடு இல்லை என்ற கொதிப்பிலே,
தவித்ததோமடா அந்த நினைப்பிலே,
அதிகாரமும் அகங்காரமும் கைகோர்த்தது,
தெற்கில் பலர் கை துடித்தது,
இருட்டு ஆட்சியின் கோர தாண்டவம்,
அழிய காத்திருக்கும் உன் ஆணவம்,
வடக்கு என்றும் எடக்கு முடக்கு,
தெற்கோ நாட்டிற்கு ஒளி விளக்கு,
உன் குருட்டு கண்களில் மறையும்,
எங்கள் தியாகங்கள் எப்படி தெரியும்?
அலட்சியம் செய்தால் எங்களை, அடக்குவோம் இறுதி வரை உங்களை,
பொறுத்திருந்து பார் அரசே,
தமிழன் முழங்குவது வெற்றி முரசே !!
- பிராங்கிளின்
No comments:
Post a Comment