நேருவின் பொற்காலங்களை மறந்தோம்,
நமக்கு வேண்டிய சுதந்திரத்தை இழந்தோம்,
பொருளாதாரம் சரிந்து சீர் குலைந்தது,
விலைகள் வானலாவி உயர்ந்தது,
மக்கள் சகிப்புத் தன்மைக்கு சோதனை,
ஏழை எளிய மக்களுக்கோ வேதனை,
ஓட்டை ஆட்டை போட்டவர்கள்,
நாட்டை கூறு போடுகிறார்கள்,
வெல்பவன் சூழ்ச்சியால் வீழ்ந்தான்,
வென்றவன் நாட்டையே கவிழ்த்தான்,
வேறு வழி என்ன சொல்லுங்கள்?
நீதி அரசர்களும் செவிடான பிறகு?
பொறுமை கொண்டு
காத்திருப்போம் கண்ணியத்துடன்,
காலம் திரும்பட்டும் நல்லவர் புண்ணியத்துடன்.
- பிராங்கிளின்
No comments:
Post a Comment