Translate

Amazon wellness

Thursday, December 2, 2021

தலையங்க நாயகன் தளபதியே !

தலையங்க நாயகன் தளபதியே,

உன் சிங்கத்தலைமை தமிழனுக்கு வெகுமதியே,

வெற்றி கொண்டாய் வீரனாய்,

எங்களை பற்றி கொண்டாய் அன்பனாய்,

பிரமாண்டமான உன் துவக்கம்,

எதிரிக்கு தந்தது மீளா துக்கம்,

சாவல்கள் பல இருக்கு நமக்கு,

அதை முறியடிப்பாய் நன்றி உனக்கு,

உழைப்புதான் உனக்கு மலர்கிரீடம்,

பலர் பிழைப்புக்கு அது வைத்தது முட்கிரீடம்,

பாசிசம் என்னும் அறக்கனை வென்றாய்,

அதை ஸ்டாலினிசம் மூலம் கொன்றா

வாக்குத்தவராத உன் ஆட்சி,

வாக்குவாதம் செய்வோரை மடக்கியாச்சு,

நிறுத்தினாய் உன் செங்கோலை,

அந்த வேகத்தில் சாய்த்தாய் ஒரு ஆதிக்க வேலை,

சமூக நீதியை உயரத்தினாய் திராவிட கரத்தால்.

மக்கள் பீதிகளை குறைத்தாய் இறைவன் கொடுத்த வரத்தால்,

மக்கள் செல்வாக்கு என்றும் உண்டு உனக்கு,

அதை மாறாமல் தந்தது எங்கள் வாக்கு,

என்றும் அயராது உழைக்கும் இளைஞன் நீ,

நாடு போற்றும் அரசியல் கவிஞன் நீ,

உன் மிடுக்கு தந்தது அனைவருக்கும் துடிப்பு,

அதனால் கெட்டது பலரின் இடைவிடா நடிப்பு,

நன்று அமைத்தாய் பொருளாதார வெற்றிப்படை,

அது வரப்போகும் சாவல்களுக்கு ஒரு இன்றியமையா கழக விடை,

வந்துட்டாரே ! என்ற அனைவர் குரல் ஒங்க!

தனந்துட்டாரே ! என்று எங்கள் உரிமைகள் முழங்க !

முன்னெறி செல்வோம் உன் உயர்ந்த தலைமையில், 

எங்கள் கனவுகள் பலிக்கட்டும் இந்த இன்ப அதிர்ச்சியில் !

சிறக்கட்டும் உன் திராவிட ஆட்சி,

நாங்கள் யாவரும் அதற்கு முழு சாட்சி !

- பிராங்கிளின் ஸ்டான்லி

No comments:

Post a Comment

மழை என்னும் இயற்கை வரம்

 உறவுகள் உறங்காமல், கனவுகள் கலையாமல், நினைவுகள் கலங்காமல், சுமைகள் வலிக்காமல், மெல்லிய காற்று விரைந்து வர, மலர் மொட்டுகள் விரிந்து பார்க்க, ...

POPULAR POSTS