பெண்ணே நீ ஹாக்கியை தூக்கிய தாக்கம்,
அளித்ததே ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கம்,
அறை இறுதியில் முழு மூச்சு,
அதுவே உன் மன உறுதிக்கு பெரும் சாட்சி,
பதக்கம் இல்லை.. ஆனால் வருத்தமும் இல்லை,
உன் விடா முயற்சிக்கு எல்லையும் இல்லை.
வீழ்ச்சியில் வீரம் கக்கினாய்,
நீர்வீழ்ச்சி போல் உன்னை இயக்கினாய் !
என்றும் உன் வீரம் வெல்லும்,
பொறுத்திரு.. உன் இலக்கு உன்னை தூக்கி செல்லும் !
- பிராங்கிளின்